தமிழ் சீரியல்களில் முக்கிய நடிகையாக வலம் வரும் ரேகா நாயர், Tamil Movie World Media YouTube சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கைச் சவால்கள் குறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார்.
பேட்டியில், “என் முகம் கருமையாக இருந்ததால், புடவையில் குத்திய மைக் நிறத்தில் என் முகம் தெரியும். ‘கருங்குயில் போகுது’, ‘Fair and Lovely வாங்கி குடுங்க’ என பலர் கிண்டல் செய்தார்கள்,” என தெரிவித்த அவர், இவை தன்னை மனதளவில் பாதித்ததாக கூறினார்.
இது வெறும் வேதனையால் முடிவடையவில்லை. தனது தாய் வெள்ளை நிறத்துடனும், தந்தை கருமை நிறத்துடனும் இருந்ததாக பகிர்ந்த ரேகா, “பார்த்திபன்-சீதா காம்பினேஷன் போல இருந்தார்கள்” என்றார். தொடர்ந்து கிண்டல்கள் வந்தபோதும், மக்கள் எதையையும் கிண்டலாக்கும் மனநிலையை புரிந்துகொண்டதுதான் வாழ்க்கையின் திருப்புமுனையாயிற்று.
“யார் என்ன சொன்னாலும் அதை மனதில் பதியவைக்கக்கூடாது. மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் தான் முன்னேற முடியும்,” என்று கூறிய ரேகா, தனது பயணத்தில் உறுதியாக முன்னேறியுள்ளார்.
இன்றைய நாளில் முன்னணி சின்னத்திரை நடிகையாக இருக்கிறார் ரேகா நாயர். நிறவெறிக்கு எதிராகவும், சுய ஏற்றுக்கொள்கையை வலியுறுத்தும் அவரது இந்த உரை, பலருக்கே ஊக்கமாக அமைகிறது.
0 Comments