ipl மேக்ஸ்வெல்லின் மோசமான பேட்டிங் – ரசிகர்கள் ஏமாற்றத்தில்!

2021 முதல் 2023 வரையிலான சீசன்களில் க்ளேன் மேக்ஸ்வெல், RCB அணிக்காக 41 போட்டிகளில் 1214 ரன்கள், 12 அரைசதங்கள் என அபாரம் செய்திருந்தார்.

அப்போது அவரை “Match Winner” எனவே அழைத்தனர்.

ஆனால் 2024 மற்றும் 2025 இப்போது நடக்கும் சீசனில் அவர் மிக மோசமான பாணியில் ஆடி வருகிறார்.

இரண்டு சீசன்கள் சேர்த்து 14 போட்டிகளில் வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்!

ஒரே ஒரு அரைசதமும் இல்லை என்பது அவருக்கே ஒரு பெரிய பின்னடைவாகும்.

இதனால் பலர், " RCB ஏன்  கழட்டி விட்டாங்கன்னு இப்பதான் புரிகிறது!"

"இந்த சீசனோட அவர் IPL பயணம் முடிவா?"

என்கிற கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிட்டனர். 

சிறந்த பவுலிங் அட்டாக்களை எதிர்கொள்வதில் சிரமம், பிசியை பயன்படுத்த முடியாமை மற்றும் அடையாளம் தெரியாத பதட்டம் – இவை எல்லாம் அவரின் வெற்றிப்பாதையில் தடையாக செயல்பட்டுள்ளன. என்று ரசிகர்கள் அதிருப்தியுடன் சொல்லுகின்றனர்.

இப்போதைக்கு, மேக்ஸ்வெல்லின் IPL பயணத்தின் முடிவைக் காண நேரமா என்னும் சந்தேகம் எழுந்திருக்கிறது.

Post a Comment

0 Comments