பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, அவரது சட்டத்தரணியான உதய கம்மன்பில நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் துறையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பொலிசாரும் உடனிருந்தனர்.
சந்திப்பிற்குப் பிறகு, கம்மன்பில் நாளை ஊடக சந்திப்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சந்திப்பின்போது பிள்ளையான் உணர்ச்சி தடுக்க முடியாமல் கண்ணீர் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை ஆட் கடத்தல் வழக்கில் கைது செய்த பிறகு, தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் சாட்சியாக்க வலியுறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
போரின் போது அரசுகளால் பயன்படுத்தப்பட்ட பின், தற்போது கைவிட்டுவிட்டதாகவும், முதுகு வலியுடன் தரையில் தூங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.
பிள்ளையான் தற்போது 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை எதிர்நோக்கி வருகிறார்.
0 Comments