மலையாள திரையுலகில் தனித்திறமையுடன் பரிச்சயமான நடிகை வின்சி அலோசியஸ், "விக்ருதி" திரைப்படத்தின் மூலம் 2019-ல் திரைத்துறையில் அறிமுகமாகினார். பின்னர் பல சிறந்த படங்களில் நடித்த இவர், "ரேகா" படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகை விருதும் பெற்றுள்ளார்.
சமீபத்தில், "போதைப்பொருள் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன்" என வின்சி தெரிவித்திருந்த நிலையில், இதற்கான காரணம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவரது வார்த்தைகளில், ஒரு மலையாள படத்தில் முன்னணி நடிகருடன் நடித்தபோது, அவர் போதைப்பொருள் காரணமாக உடன் நடிக்கும் நடிகைகளுக்கு அத்துமீறினார். இதனால் அந்த படத்திலிருந்து விலக தீர்மானித்தாலும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் வேண்டுகோளால் மீண்டும் நடித்ததாகக் கூறினார்.
“பொது இடங்களில் அல்லது படப்பிடிப்பு தளங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவது ஏற்கக்கூடியது அல்ல” என்றும், அதனால் தான் இவ்வாறு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
வின்சியின் இந்த துணிச்சலான கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
0 Comments