வவுனியா – ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியர் தயாபரன் விபத்தில் உயிரிழப்பு

வவுனியா – ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியராகப் பணியாற்றிய தயாபரன் அவர்கள், கடந்த 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதி விபத்தில் கடுமையாகக் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பல நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி 09.04.2025 அன்று இரவு உயிரிழந்தார் என்பதோடு, இந்தச் செய்தி அவரது குடும்பத்தினரையும், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமுகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன்னுடைய கல்வி சேவையால் மாணவர்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஆசான் தயாபரன் அவர்களின் திடீர் மறைவு, வவுனியா மற்றும் ஓமந்தை பகுதிகளில் உணர்ச்சி எழுச்சியையும் இரங்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments