நாட்டின் பல பகுதிகளில் நாளை (ஏப்ரல் 17) வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பம் அதிகரிக்கக்கூடிய பகுதிகள்:
* வடக்கு மாகாணம்
* வடமத்திய மாகாணம்
* வடமேல் மாகாணம்
* சப்ரகமுவ மாகாணம்
* தென் மாகாணம்
* கிழக்கு மாகாணம்
* இரத்தினபுரி மற்றும் மொனராகல மாவட்டங்கள்
இந்த இடங்களில் மனித உடல் உணரும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடிய நிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுரை:
* வெளிப்புற செயல்பாடுகளை குறைக்கவும்
* போதுமான அளவு தண்ணீர் அருந்தவும்
* வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும்
வெப்ப அலை காரணமாக ஏற்படக்கூடிய சீரழிவுகளை தவிர்க்க, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments