சுகுமார் இயக்கிய 'புஷ்பா 2' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவில் அபார வெற்றியை பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மெய்மறக்க வைத்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்திற்கு பிரபல இயக்குநர் அட்லீவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த புதிய திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கவுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் இன்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் இயக்குநர் சுகுமாரிடம் "தமிழில் நீங்கள் ஒரு படம் இயக்க வேண்டியிருந்தால், எந்த நடிகரை தேர்வு செய்வீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
"நான் தமிழில் படம் எடுப்பேன் என்றால் விஜய், அஜித், மற்றும் கார்த்தி ஆகிய மூவரையும் வைத்து படம் எடுக்க விரும்புகிறேன்" என்றார்.
அவரது தமிழ் சினிமா மீது உள்ள காதலும், எதிர்காலத்தில் அவர் தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு சர்ப்ப்ரைஸ் கொடுப்பார் என்பதையும் உறுதி செய்கிறது!
0 Comments