உலகின் மிகவும் வயதான கொரில்லா தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது

உலகின் வயதான கொரில்லாவாகக் கருதப்படும் "ஃபடு" (Fatou) தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. 1957ஆம் ஆண்டு பிறந்த இந்த பெண் கொரில்லா, 1959ஆம் ஆண்டு ஜெர்மனியின் பர்லின் மிருகக் காட்டில் கொண்டு வரப்பட்டது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஃபடு தற்போது ஆரோக்கியமாக இருந்தாலும், வயதானதன் காரணமாக தசை வலி உள்ளிட்ட சில மருத்துவ பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறது என தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக காட்டில் வாழும் கொரில்லாக்கள் சுமார் 35 முதல் 40 ஆண்டுகள் வரை வாழ்ந்தாலும், மிருகக்காட்சிசாலைகளில் அவர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கப்படும் என்பதால், அதிக ஆண்டுகள் வாழ முடிகிறது என மிருக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments