இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓட்டங்களால் டெல்லி கெப்பிடல்ஸை வீழ்த்தி வெற்றியினைப் பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிடல்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை குவித்தது.
வெற்றிக்கான இலக்காக 206 ஓட்டங்களை நோக்கி பதிலடி கொடுத்த டெல்லி கெப்பிடல்ஸ் அணி, 193 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
பிரதிகாதையாக விளையாடிய மும்பை வீரர் கரன் சர்மா, இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0 Comments